Asianet News TamilAsianet News Tamil

15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் சினிமாவின் தீராத விளையாட்டுப் பிள்ளை விஷால்...

விஷாலின் முதல் படமான ‘செல்லமே’ ரிலீஸாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை ஒட்டி அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் #15YearsOfVishalism #Vishal15Years ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டிங் செய்ய முயன்று வருகிறது. இந்த 15 ஆண்டுகளில் விஷாலுன் முகுகில் குத்தியவர்கள், அதனால் அவருக்கு ஏற்பட்ட விழுப்புண்களையும் அவரது விஸ்வாசிகள் தவறாமல் குறிப்பிட்டு வருகிறார்கள்.

vishal finishes 15 years in tamil cinema
Author
Chennai, First Published Sep 10, 2019, 11:30 AM IST

விஷாலின் முதல் படமான ‘செல்லமே’ ரிலீஸாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை ஒட்டி அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் #15YearsOfVishalism #Vishal15Years ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டிங் செய்ய முயன்று வருகிறது. இந்த 15 ஆண்டுகளில் விஷாலுன் முகுகில் குத்தியவர்கள், அதனால் அவருக்கு ஏற்பட்ட விழுப்புண்களையும் அவரது விஸ்வாசிகள் தவறாமல் குறிப்பிட்டு வருகிறார்கள்.vishal finishes 15 years in tamil cinema

ஆனாலும் 15 ஆண்டுகால தீராத விளையாட்டுப் பிள்ளை’ விஷாலும் அவரது அவரது ஆதரவாளர்களும்  இந்த நாளில் சவுகர்யமாய் மறந்திருப்பது அவருக்கு ‘செல்லமே’சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணாவை. அது தொடர்பான ஒரு மீள் பதிவை இங்கே காணலாம்...

’நன்றியா?...அது கிலோ என்ன விலை? எந்தக் கடையில கிடைக்கும்?? என்று கேட்கும் விஷால்...ஜூலை 4,2019....

தன்னை திரையுலகத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநரிடமே ‘கதை கேட்க நேரமில்லை’ என்று நடிகர் விஷால் உதாசீனப்படுத்தியிருப்பது கண்டு நெட்டிசன்கள் வலைதளங்களில் கொந்தளித்து வருகிறார்கள்.

விஷால் தனது முதல் படத்தை மறந்திருக்கலாம். ஆனால் அவரை அறிமுகப்படுத்தியவர் அதை  மறக்க முடியுமா? ’செல்லமே’படம் மூலம் விஷாலை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் காந்தி கிருஷ்ணா. இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான இவரது முதல் படம் ‘எஞ்சினியர்’அரவிந்தசாமி,மாதுரி தீக்‌ஷித் காம்பினேஷனில் துவங்கப்பட்டு டிராப் ஆனது. அடுத்து விஷால்,பரத்,ரீமா சென் காம்பினேஷனில் இவர் துவங்கிய படம் தான் ‘செல்லமே’. இப்படம் 100 நாட்கள் ஓடி விஷாலுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஓபனிங் கிடைத்தது.vishal finishes 15 years in tamil cinema

‘செல்லமே’வுக்கு அடுத்து காந்தி கிருஷ்ணா இயக்கிய ‘ஆனந்த தாண்டவம்’படம் சரியாக ஓடாத நிலையில் அடுத்தபடம் கிடைக்காமல் இருந்த அவருக்கு மிக நீண்ட இடைவேளைக்குப் பின் விக்ரம் இயக்கத்தில் கிடைத்த ‘கரிகாலன்’படமும் நகரவே இல்லை. இந்நிலையில் அவ்வளவு சீக்கிரம், அறிமுகப்படுத்திய தன்னை விஷால் மறந்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் அவரிடம் கதை சொல்வதற்காக முயற்சித்திருக்கிறார் காந்தி கிருஷ்ணா. ஆனால் அவரைச் சந்திக்க கூடம் நேரம் ஒதுக்கவில்லையாம் விஷால்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் மிகுந்த வேதனையுடன் பதிவிட்ட அவர்,...A R Gandhi Krishna
1 hr · 
விஷால் அறிமுகமான படம், “செல்லமே!!”
அதன் இயக்குனர் 
காந்திகிருஷ்ணா
நான்.
என்னிடம் கதை கேட்க நேரம் இல்லை!!!
வாழ்க வளமுடன்....என்று பதிவிட்டிருக்கிறார். அதன் பின்னூட்டத்தில் மக்கள் விஷாலின் மானத்தை வெரைட்டியாக வாங்கி வருகிறார்கள். உங்கள் #15YearsOfVishalism #Vishal15Years ஹேஷ்டேக்குகளில் இந்தப் பதிவையும் இணைத்துக்கொள்வீர்களா விஷால் ரசிகர்களே?...

Follow Us:
Download App:
  • android
  • ios