Asianet News TamilAsianet News Tamil

’திடீர்னு அவசரத்துக்கு ஆவேசப்பட்டா இப்பிடித்தான் ஆகும்’...விஷாலை நோஸ்கட் பண்ணிய தியேட்டர் நிர்வாகி...

'வருஷத்துக்கு ஒரு வாட்டி ரிலீஸாகுற ஆங்கிலப் படங்கள் மேல காட்டுற அக்கறையைக் கொஞ்சம் வாராவாரம் ரிலீஸ் ஆகுற தமிழ்ப் படங்கள் மேலயும் காட்டுங்க பாஸ்’ என்று தியேட்டர் நிர்வாகி ஒருவருக்கு ட்விட்டரில் கமெண்ட் போட்டிருக்கிறார் நடிகர் விஷால்.

vishal fights with a theatre admin
Author
Chennai, First Published Apr 27, 2019, 10:05 AM IST

'வருஷத்துக்கு ஒரு வாட்டி ரிலீஸாகுற ஆங்கிலப் படங்கள் மேல காட்டுற அக்கறையைக் கொஞ்சம் வாராவாரம் ரிலீஸ் ஆகுற தமிழ்ப் படங்கள் மேலயும் காட்டுங்க பாஸ்’ என்று தியேட்டர் நிர்வாகி ஒருவருக்கு ட்விட்டரில் கமெண்ட் போட்டிருக்கிறார் நடிகர் விஷால்.vishal fights with a theatre admin

’அவெஞ்சர்ஸ்’ வகையறாக்களின் முதல் மூன்று பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் கடைசி பாகமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ என்ற படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சர்வ நாசம் செய்து வருகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே ஒரு தீம் பாடலுக்கு இசையமைத்திருக்க,  தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் வசனத்தில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா போன்றோரின் குரலில் டப் செய்யப்பட்டு நேற்று  வெளியாகி வசூலில் ரெகார்ட் பிரேக் செய்து வருகிறது.

ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன், தமிழ் ராக்கர்ஸ் அவெஞ்சர்ஸை இணையத்தில் வெளியிட அதன் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கதையின் முக்கியமான திருப்பங்கள் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவும், பிரத்தியேகமாக அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்காக தியேட்டரை மெருகேற்றியுள்ள சென்னை வெற்றி தியேட்டர்ஸ் ராகேஷ் கெளதமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேமை வீடியோ எடுக்கும் நண்பர்களிடம் நாங்கள் கொஞ்சம் கண்டிப்பாக இருப்போம். தயவுசெய்து உங்கள் செல்ஃபோனை  சைலன்ட் மோடுக்கு  மாற்றி, உள்ளே வைத்து, சமூக ஊடகங்களில் அப்டேட் செய்வதைத் தவிர்த்து, படத்தை மட்டும் ரசியுங்கள்’ என ரசிகர்களை செல்லமாக எச்சரித்திருந்தார்.vishal fights with a theatre admin

இதைக் கண்டு வெகுண்டெழுந்த நடிகர் விஷால்,...'வருஷத்துக்கு ஒரு வாட்டி ரிலீஸாகுற ஆங்கிலப் படங்கள் மேல காட்டுற அக்கறையைக் கொஞ்சம் வாராவாரம் ரிலீஸ் ஆகுற தமிழ்ப் படங்கள் மேலயும் காட்டுங்க பாஸ்’என ட்விட் பண்ணவே பதிலுக்கு விஷாலை நோஸ் கட் பண்ணிய  ராகேஷ்,...நாங்கள் எப்போதும் திருட்டு வி.சி.டி.க்கு எதிராகவும், சினிமாவுக்கு ஆதரவாகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறோம். இதில் மொழி பாரபட்சம் எல்லாம் பார்ப்பதேயில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios