தீபாவளிக்கு வெளியிட போவதாக அறிவித்து பின் நவம்பர் மாதத்திற்கு தள்ளி போன விஷாலின் கத்தி சண்டை படம் ஷூட்டிங் முழுமையாக தற்போது முடிவடைந்துள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பட்டப்படிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. இதில் விஷால் வில்லன்களை துரத்தி, துரத்தி அடிப்பது, வாகனங்களில் விட்டு மோதும் காட்சிகள் படமாக்க பட்டுள்ளது.

இதற்காக 7 பிரத்யேக கேமராக்கள் கொண்டு காட்சிகளை தீவிரமாக படமாக்கியுள்ளனர். பொதுவாக விஷாலின் படங்களில் ஸ்டண்ட் பயபகரமாக இருக்கும்.

தற்போது பொது இடத்தில நடந்த இந்த சண்டையை நேரில் பார்த்த சிலர் நிஜமான சண்டை தானோ? என திகைத்துள்ளனர்.