Asianet News TamilAsianet News Tamil

விஷால் திருமணம் நடக்குமா? எப்போது... தந்தை வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

நடிகர் விஷால், அனிஷா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக, விஷாலின் தந்தை, கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார்.  அதை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு பழகி வந்த நிலையில், இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிகவும் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

vishal father gk reddy about her marriage
Author
Chennai, First Published Oct 13, 2019, 4:59 PM IST

நடிகர் விஷால், அனிஷா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக, விஷாலின் தந்தை, கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார்.  அதை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு பழகி வந்த நிலையில், இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிகவும் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

vishal father gk reddy about her marriage

மேலும் இவர்களுடைய திருமணம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் திடீர் என அனிஷா, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்பங்களை நீக்கியதால், விஷால் திருமணம் நின்று விட்டதாக பல செய்திகள் தொடர்ந்து வந்தது.

இதை தொடர்ந்து அனிஷா - விஷால் இடையே இருந்த கருது வேறுபாடு பிரச்சனைகள் முடிவிற்கு வந்தது. அனிஷா விஷால் கிடைக்க நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என தெரிவித்து காதலை தொடர்ந்தார். 

vishal father gk reddy about her marriage

ஆனால் தற்போது இவர்களுடைய, திருமணம் குறித்து எந்த ஒரு செய்திகளும் வெளியாகவில்லை. நடிகர் சங்கம் கட்டிட வேலைகளும் ஒரு சில பிரச்சனைகளால் அப்படியே நிற்கிறது. 

vishal father gk reddy about her marriage

இந்நிலையில், தற்போது பட விழாவில் கலந்து கொண்ட விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி... நீதிமன்றத்தில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நடிகர் சங்க ஓட்டு என்னும் பணி விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். அதில் விஷாலின் அணி வெற்றி பெற்றதும், விரைவிலேயே கட்டிடம் முடிக்கப்பட்டு அதில் தான் விஷாலின் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios