Vishal fails to disappoint - Director Cheran smacks of ...

நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலுடன் தொழில் ரீதியாகப் போட்டி இருந்தாலும், அவரின் தோல்வி வருத்தமளிக்கிறது என்று தயாரிப்பாளரும் இயக்குநருமான சேரன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதைக் கண்டித்து சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனால், அவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சேரன், அமைதியான முறையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றித் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர்,”நண்பர் விஷாலின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அனுபவமின்மையே காரணம். தொழில் ரீதியாகப் போட்டி இருந்தாலும், அவரின் தோல்வி வருத்தமளிக்கிறது.

விளம்பரத்திற்காக ஆசைப்படுபவர்கள் யாரென மக்களுக்குத் தெரியும். விஷால் அனுப்பிய எல்லாக் கடிதங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அடுத்தத் தயாரிப்பாளர் சங்கப் பொதுத் தேர்தலின்போது எங்கள் பிரச்சனைகளை முன்வைப்போம்” என்று தெரிவித்தார்.