வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் வீண் அரசியல் செய்யாதீர்கள்... மத்திய, மாநில அரசுகளுக்கு விஷால் வைத்த கோரிக்கை
வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு உதவிடும் வகையில் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை தீட்டுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் விஷால்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் நிலைகுலைந்து போன வயநாடு மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து நடிகர் விஷால் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன என பதிவிட்டுள்ள அவர், கேரளாவில் நடந்த துயர சம்பவம் எல்லோரது மனதிலும் மிகுந்த வலியை ஏற்படுத்தி இருப்பதாக பதிவிட்டு இருக்கிறார். மேலும், ஒவ்வொரு நாட்களையும் மிகுந்த மன வேதனையுடன் கடந்து சென்று கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... மஞ்சும்மல் பாய்ஸும் இல்ல, கல்கியும் இல்ல... பட்ஜெட்டை விட 45 மடங்கு அதிக லாபம் பார்த்த ஒரே படம் எது தெரியுமா?
இயற்கைக்கு முன் மனிதர்களால் எதுவும் செய்ய முடியாது என்றாலும் இந்த துயரமான நிகழ்வினை மனது ஏற்க மறுக்கிறது. வாழ்வாதாரத்தை, உறவினர்களை, தங்களுடைய இருப்பிடத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் அந்த மக்களுக்கு நாம் ஒன்றிணைந்து சாதி, மத பேதமின்றி உதவி செய்வோம்.
இந்தத் துன்பமான நிகழ்வில் தங்களுடைய உயிரை துச்சமென நினைத்து மக்களை காக்க போராடிவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என பதிவிட்டுள்ள விஷால், இந்நிகழ்வினை வீண் அரசியல் ஆக்காமல் மக்களுக்கு உதவிடும் வகையில் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை தீட்டுமாறு அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Kanguva : லீக்கான டாப் சீக்ரெட்... சூர்யாவின் கங்குவா படத்தில் கார்த்தி வில்லனா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!