அதென்னவோ தெரியவில்லை, சிம்புவுக்கும், விஷால் தலைமையிலான இரண்டு சங்கங்களின் முடிவுகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். 
இப்போதும் அப்படியொரு அல்லோலகல்லோலம். பிப்ரவரி 3ம் தேதி சிம்புவுக்கு பிறந்த நாள். அதே நாளில்தான் அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் துவக்க விழாவை திட்டமிட்டு இருந்தார்கள். அதுவும் படப்பிடிப்புடன் கூடிய பூஜை. இதெல்லாம் அறியாமல் விஷால், பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறார். ஏன்? இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி நடக்கிறது. அதில் வரும் வருமானத்தை தயாரிப்பாளர் சங்க கணக்கில் சேர்க்கிறார்களாம்.

ஏற்கெனவே வந்தால் ராஜாவாகத்தன் வருவேன் படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் ரெட் காடு போட்டு வாய்க்கால் சண்டையை வம்புக்கிழுத்திருந்தார் விஷால். அதை முறியடித்து ’’எனக்கா ரெட் கார்டு போடுறே...’’ என சீறிப்பாய்ந்தார் சிம்பு. இப்படி தொடர் கெடுபிடி காட்டியதால் விஷால் இப்போது முடங்கிக் கிடப்பது சிம்புவுக்கு உள்ளூர சந்தோசத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.