vishal control the thetre price
கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியானால் அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்திக்கொண்டு அதிக கட்டணம் வசூலித்து திரையரங்கு உரிமையாளர்கள் பணம் பார்த்து வந்தனர்.
மேலும் நடுத்தர குடும்பத்தினர் தங்களுடைய இரு குழந்தைகளுடன் ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 1500 ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் நிலைதான் இருந்து வருகிறது. தற்போது இதற்கு முடிவு கட்டும் விதமாக நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
நாளைமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் அனைத்து தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்.
கேண்டீனில் விற்கும் தின்பண்டங்களை MRP விலைக்குதான் விற்கவேண்டும்
அம்மா தண்ணீர் பாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் விற்கப்படவேண்டும்
தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்
பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.
விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படவேண்டும் .
மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த அறிவிப்பால் சினிமா ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
