Asianet News TamilAsianet News Tamil

வலைதளம் மீது நடிகர் விஷால் கமிஷனரிடம் புகார் - தமிழர்களை சோம்பேறிகள் என்று சொன்னதாக செய்தி

vishal compalint-about-websites
Author
First Published Jan 12, 2017, 3:03 PM IST

தமிழர்கள் சோம்பேறிகள் , அவர்களுக்கு மது போதும் என்று தான் சொன்னதாக உண்மைக்கு மாறான செய்தி வெளியிட்ட வெப்சைட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஷால் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விஷாலின் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

vishal compalint-about-websites

சமீபத்தில் வலைதளம் ஒன்றில் , தமிழக மக்கள் சோம்பேறிகள் , அவங்களுக்கு மதுக்கடை போதும் ...... என்ற தலைப்பில் விஷால் கூறியதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள் .இது முற்றிலும் தவறான செய்தி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார் . 

மேலும், தமிழக மக்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். என் மீது வீண்பழி சுமத்துவது போல் இந்த செய்தியைவெளியிட்டுள்ள TamilStar.com என்ற வலைத்தளத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

vishal compalint-about-websites

இது போன்ற வலைதளத்தில் உண்டாக்கப்படும் செய்தியால் தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்க வழி செய்கிறார்கள் . மேலும் சமீப காலமாக முகம் தெரியாத நபர்கள் போன் மூலம் (+96896520944 , +19196382854, +14436360331 ) தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். 

இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்         இவ்வாறு விஷால் தரப்பில் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.​ இந்த புகாரை நடிகர் விஷால் சார்பில் அவரது ரசிகர் மன்ற செயலாளர் ஹரிகிருஷ்ணன் அளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios