இந்நிலையில் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சித்து வருவதாக நடிகர் விஷால் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்து. அதையடுத்து துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் பங்கேற்றார் விஷால், அதிலும் பட்ஜெட்டுக்கு மீறி செலவு செய்ததாக கூறி மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் இடையே பிரச்சனைகள் வெடித்தது. இதையடுத்து அந்த படத்திலிருந்து மிஷ்கின் விலக, மீதமிருந்த படத்தையும் தானே இயக்குவதாக விஷால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக லண்டனில் நடைபெற்று வந்த அந்த படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள சக்ரா படத்தில் விஷால் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ள இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


ஆன்லை மோசடி குறித்து தயாராகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகி வைரலானது. தனது தந்தையின் அசோகச் சக்கர பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். விஷால் மீண்டும் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளதால் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சித்து வருவதாக நடிகர் விஷால் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

Scroll to load tweet…

சமீபத்தில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஏகபோக வரவேற்பு கிடைத்ததோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதையடுத்து சக்ரா படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை விஷால் கைவிட்டதாக கூறப்பட்டது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக தியேட்டரில் சக்ரா படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் அறிவித்துள்ளார். பிப்ரவரி 19ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.