vishal brother death
நடிகர் விஷால் நடிப்பில், வரும் வெள்ளிக்கிழமை அன்று 'இருப்புத்திரை' படம் வெளியாக உள்ள நிலையில். விஷாலின் சகோதரர் முறை உள்ள, உறவினர் பார்கவ் என்பவர் திடீர் என தற்கொலை செய்துக்கொன்டுள்ளார். இதனால் விஷாலின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ' பார்கவ், உன்னுடைய வாழ்க்கை அதற்குள் முடிந்து விட்டதா. இருக்கவே முடியாது. நான் என்னுடைய சொந்த சகோதரனை இழந்து விட்டேன். என்னால் இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. உன்னை நான் தொலைத்து விட்டேன். நீ ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தாய். உனக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் என்னிடம் கூறியிருந்தால் நான் தீர்த்து வைத்திருப்பேன். என கண்ணுருடன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.
