vishal and varalakshmi again join

நடிகை வரலட்சுமியும் விஷாலும் காதலித்ததாக பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சேர்த்து சுற்றியது மூலம் இவர்களது காதல் உறுதிப்படுத்தப்பட்டது. 

ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு, விஷால் தன் உதவியாளரிடம் கூறி காதலை உடைத்து விட்டார் என்பது போல வரலக்ஷ்மி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதன் பின் இருவரும் எந்த ஒரு விழாக்களிலும் சந்திக்கவும் இல்லை, இந்நிலையில் லிங்கு சாமி இயக்கும் "சண்டகோழி 2 " படத்திற்காக மீண்டும் இவர்கள் இணையுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ், தெலுங்கு,மலையாளம் என பிசியாக இருக்கும் வரலக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த கதாபாத்திரம் விஷாலுடன் வெறித்தனமாக மோதும் ஒரு பெண்ணின் கதாபாத்திரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இதில் ஹீரோயினாக கீர்த்திசுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.