Vishal and Thanu leave their Ego to Save cinema- Vivek Request
சினிமாவை காப்பாற்ற ஈகோவை விடுத்து விஷால், தாணு ஒன்றிணைய வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரைப்படங்களுக்கு இரட்டை வரி விதிப்பு அமல்ப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து திரையுலக பிரபலங்கள் ரஜினி, கமல் உள்பட பலரும் ஏதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விவேக் “சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள்” என்று இரட்டை வரிவிதிப்பு முறை குறித்து வேதனை தெரிவித்துள்ளார்,
மேலும், இதுகுறித்து நடிகர் விவேக் கூறியது:
"சினிமாவைக் காப்பாற்ற ஈகோவை விடுத்து பழைய, புதிய நிர்வாகிகளான விஷால் மற்றும் தாணு ஒன்றிணைய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
சினிமா வெளியீட்டு, டிக்கெட் விலை இவைகளை நெறிப்படுத்தாவிட்டால், விரைவில் தயாரிப்பாளர்களும், சினிமாவும் அழியும். இதில் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் வரி வேறு.
திருட்டு விசிடி, பதிவிறக்கம், யார் யாரோ செய்யும் விமர்சனங்கள், டிக்கெட் விலை, இப்போது வரி - சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள்.
உச்ச நட்சத்திரங்களும், பெரும் தயாரிப்பாளர்களும் சினிமா வரியை எதிர்த்து குரல் கொடுக்காவிட்டால், சிறு தயாரிப்பாளரின் குரல்வளை நெறிக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
