தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷாலை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கின் விசாரணையின்போது விஷால் வருத்தம் தெரிவித்தும் சஸ்பெண்ட் தொடரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் விஷாலின் சஸ்பெண்டை இன்றுக்குள் தயாரிப்பாளர் சங்கம் ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அறிவித்தது.

இதனையடுத்து சற்று முன்னர் விஷாலின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. விஷால் மன்னிப்பு கோரியதால் அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது