கடந்த சில தினங்களாக கோலிவுட் திரையுலகினர் ஒன்று திரண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தயாரிப்பாளர்களின் பிரச்சன்னையை தீர்க்க சங்க நிர்வாகிகள் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான். 

இது குறித்து நடிகர் சங்கங்கதுடன் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தயாரிப்பளர்களின் செலவை குறைக்கும் வகையில் நடிகர்களின் உதவியாளர்களுக்கு ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படுவதென முடிவெடுக்கப்பட்டது. 

அதற்கும் மேல் உதவியாளர்களின் செலவு அதிகமானால், அந்த தொகையை நடிகர்களே வழங்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நடிகர் சூர்யா, தனது உதவியாளரின் முழு செலவையும் தானே ஏற்பதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஷால் மற்றும் கார்த்தியும் தங்கள் உதவியாளர்களின் செலவை தாங்களே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். 

இவர்கள் ஏற்றுக்கொண்டது போல் அனைத்து நடிகர்களும் தங்களுடைய உதவியாளர்களின் செலவை அவர்களே ஏற்றுக்கொண்டால் தயாரிப்பலர்களுக்கு 20 லட்சம் அளவிற்கு தயாரிப்பு செலவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.