நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

மேலும் இவர்கள் இருவரையும் வைத்து 'அவன் இவன்' படத்தை இயக்கினார் இயக்குனர் பாலா. இந்த படத்தின் இருவரும் அண்ணன், தம்பியாக நடித்தனர்.

இதை தொடர்ந்து தற்போது, இரும்புதிரை என்கிற படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த படத்தில் ஆர்யா விஷாலுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது இந்த படத்தில் இருந்து ஆர்யா தீடீர் என விலகியுள்ளார் .

ஆர்யா விலகியதற்கு காரணம் , விஷாலுடன் ஏற்பட்ட மனக்கசப்பு என்று கூறப்டுகிறது. இதன் மூலம் நண்பனுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் ஆர்யா என கிசுகிசுக்கபடுகிறது.