நடிகர் என்பதை தாண்டி, நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், என தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் விஷால். கிட்ட தட்ட 37 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர், நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் எழுந்தது.

ஆனால் சமீபத்தில் விஷாலின் தந்தை, விஷால் திருமணம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், விஷாலுக்கு ஐதராபாத் தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷா, என்ற பெண் பார்த்துள்ளதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இது பெற்றோர் பார்த்து நிச்சயயித்த திருமணம் என கூறி வந்த நிலையில், இது ஒரு லவ் மேரேஜ் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். 

மேலும், ஏற்கனவே இருவரும் பலமுறை சந்தித்துள்ளதாகவும், அதன்பின்னர் தான் இருவீட்டார்களும் திருமணம் செய்ய பேசியுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் விஷால் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விஷால் காதலித்து வந்தது வரலக்ஷ்மி இல்லை என்பது தெரியவந்துள்ளது. தொழிலதிபர் விஜய்ரெட்டி-பத்மஜா தம்பதியரின் மகளான அனிஷாவுக்கும் விஷாலுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், நிச்சயதார்த்தம் அன்றே திருமண தேதியும் முடிவு செய்யப்படவுள்ளதாகவும் இருவீட்டார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.