Asianet News TamilAsianet News Tamil

பள்ளிமாணவிக்கு பாலியல் தொல்லை... தூக்கில் போடுங்க அவரை! பொங்கி எழுந்த விஷால்..!

ஆன்லைன் வகுப்பின் போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

vishal about psbb school issue sensational twit
Author
Chennai, First Published May 28, 2021, 7:13 PM IST

கொரோனா இரண்டாவது தலை தலைதூக்கி உள்ளதால், அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின் போது, ராஜகோபாலன் என்கிற ஆசிரியன், ஆன்லைன் வகுப்பின் போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகளை பெற்றோர் ஆசிரியர்களை நம்பி பள்ளிக்கு அனுப்பும் நிலையில் ஒரு சில ஆசிரியர்கள் இது போன்ற கீழ்த்தனமான செயலில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆசிரியரின் செயலுக்கு அரசியல் வாதிகள் , பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்த வருகிறார்கள். 

vishal about psbb school issue sensational twit

இதுபோன்ற தவறுகள் ஆன்லைன் வகுப்பில் நடைபெற கூடாது என, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிப்பதற்கும் முறை படுத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நடந்து வருகிறது.

vishal about psbb school issue sensational twit

இந்நிலையில் நடிகர் விஷால் PSBB பள்ளி விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது... "பிஎஸ்பிபி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னை கூனிக்குறுக வைக்கிறது. அந்தப் பள்ளி கண்டிப்பாக மூடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இன்னும் ஒருவர் கூட மன்னிப்பு கேட்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள குடியாத ஒன்று.  இதுபோன்ற குற்றங்களுக்கு தீவிர நடவடிக்க எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னுடைய நண்பரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

vishal about psbb school issue sensational twit

அதே நேரத்தில் இதனை ஒரு சாதிப் பிரச்சினையாக சிலர் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபரை தூக்கில் தொங்கவிட வேண்டும். அப்படி செய்தால் தான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புரியும். குறைந்தபட்சம் இப்போதாவது மாணவர்களிடமும், பெற்றோரிடமும் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்’ என்று விஷால் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios