Vishal 35th Movie Title Teaser Released : விஷால் நடிக்கும் அவரது 35ஆவது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் தற்போது நடித்து வரும் படங்கள் எல்லாம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. கடைசியாக விஷால் நடித்து வெளியான மார்க் ஆண்டனி, மத கஜ ராஜா ஆகிய படங்கள் வசூம் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றன. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது துப்பறிவாளன் மற்றும் விஷால்35 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில், விஷால் நடிக்கும் அவரது 35ஆவது படத்தை இயக்குநர் ரவி அரசு இயக்கி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 99ஆவது படம் ஆகும். இந்தப் படத்தை ஆர்பி சௌத்ரி தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி என்று 2 ஹீரோயின்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு மகுடம் என்று படக்குழுவினர் டைட்டில் வைத்துள்ளனர். மேலும், அந்த டீசரில் ஹார்பர் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் டான் தொடர்பான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அங்கு விஷால் தொடர்பான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…