vishaga things thief in France
நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், சேது நடித்து மிக பெரிய ஹிட் ஆன திரைப்படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்த விஷாகா சிங் திரைப்படம் மட்டும் அல்லாது தந்தையின் பிசினெஸயும் கவனித்து வருகிறார்.
தற்போது ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த அறையை பூட்டிவிட்டு படவிழாவிற்கு சென்றுள்ளார்.
படவிழா முடிந்து மீண்டும் திரும்பி சென்று பார்த்த போது அவருடைய அறையில் நகைகள், பாஸ்போர்ட் என சில முக்கிய உடைமைகள் திருடு போயுள்ளதை கண்டு விசாகா அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றி ஓட்டல் நிர்வாகிகள் மூலம் போலிசில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரூமில் இப்படி ஜன்னல் வழியாக திருடர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது ஆச்சர்யமாக உள்ளது.
ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாக வரும் எனக்கு இந்த வருடம் சோகத்தில் முடிந்துள்ளது என விஷாகா கூறியுள்ளார்.
