கடந்த சில தினங்களுக்கு முன், இத்தாலியில் மிக பிரமாண்டமான முறையில் தன்னுடைய காதலியைக் கரம் பிடித்தார் கிரிகெட் வீரர் விராட் கோலி. இருவரும் திருமணம் முடிந்த  கையோடு தேனிலவிற்கும் சென்றனர்.

தற்போது இவர்கள் இருவரும் இந்தியாவிற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட்கோலி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகைப் படத்தில் அனுஷ்கா ஷர்மா குடும்பப் பாங்காக சல்வார்  அணிந்துள்ளார். கோலி குர்தா அணிந்துள்ளார்.

 

மேலும் இவர்கள் திருமண வரவேற்பு  நாளை 8 மணியளவில் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி உறவினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதைத் தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ள வரவேற்பு  நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே விராட் கோலி, திருமணம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை... அதே போல் இன்று தொடங்கும் 20 ஓவர் போட்டியிலும்  ஓய்வு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது