பிரபல இந்தி நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான, அனுஷ்கா ஷர்மா... பிரபல புகையிலை நிறுவனத்தின் பொருள் ஒன்றுக்கு விளம்பரம் செய்ததற்கு சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக பலர் ட்விட் பதிவிட்டு வருகிறார்கள்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனுஷ்கா ஷர்மா,  திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர்.

கடந்த வருடம் மட்டும்,  இவர் நடிப்பில் பரி, சஞ்சு, சுய் தாகா,  ஜீரோ ஆகிய படங்கள் வெளியாகின.  ஒரு படத்திற்கு 8 கோடி அளவிற்கு இவர் சம்பளம் பெறுகிறார். மேலும் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்.

இந்நிலையில் புதிதாக இவர் புகையிலை விளம்பர நிறுவனத்தின் பொருள் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.  இந்த விளம்பர வீடியோவையும்  சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.  இதுதான் தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலர் அனுஷ்கா சர்மாவை,  கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  ரசிகர் ஒருவர் புற்றுநோய் உருவாக்கும் புகையிலை நிறுவனத்திற்கு இப்படி விளம்பரம் செய்கிறீர்கள், புகையிலையால் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர்.  உங்களுக்கு ரசிகர்களின் உயிரை விட பணம் தான் முக்கியமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல் ஒருவர் உங்கள் கணவர் விராட் கோலி தீங்கு ஏற்படுத்தும் எதையும் விளம்பரப்படுத்த மாட்டேன் என்கிறார். மனைவியோ புகையிலை விற்கிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்களை தொடர்ந்து பலர் அனுஷ்கா ஷர்மாவை நோக்கி பல கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இதற்கு அனுஸ்கா சர்மா என்ன பதில் சொல்வார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.