பாலிவுட்டின் ஹாட்டான கியூட்டான ஜோடி என்றால் அது விராட் கோலியும் அனுஸ்கா ஷர்மாவும்தான்.

திருமணம்

இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த ஆண்டில் அதிகமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்ட ஒரு நிகழ்வும் இதுதான்.

அதிர்ஷ்டம்

இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் போட்டாலே அது உடனே வைரலாகும்.மேலும் தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 6 ஒரு நாள்  தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.இதற்கும் ரசிகர்கள் அனுஷ்கா உங்கள் வாழ்க்கையில் வந்ததுதான் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.

பரி

இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா தயாரித்து நடித்துள்ள பரி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கொடூர பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுஷ்கா சர்மா பேயாக நடித்து மிரட்டியுள்ளார்.

ட்ரெய்லர்

ரோசிட் ராய் இயக்கியுள்ள இப்படம் மார்ச் மாதம் 2ம் தேதிவெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தனது காதல் மனைவி அனுஷ்கா சர்மாவின் பரி படத்தின் ட்ரெய்லரை பாராட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில்

என்னவள்

எப்பொதுமில்லாத புதிய அவதாரத்தில் என்னவளை பார்க்க ஆவலாக உள்ளது. தற்போதே எனக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.காத்திருக்க முடியவில்லை என்றவாறு பதிவிட்டுள்ளார்.