vip 2 collect more then viveham in thelugan
கோலிவுட்டில் கிங் ஆப் ஓப்பனிங் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். முதல் நாள் இவருடைய படத்தை பார்க்க வேண்டும் என ரசிகர்களை தாண்டிய பல அஜித் வெறியர்களும் உண்டு. இந்நிலையில் சமீபத்தில் அஜித் மற்றும் காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த விவேகம் திரைப்படத்திற்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது.
விமர்சனங்கள் இப்படி வந்தாலும், தமிழகத்தில் விவேகம் படம் தற்போது வரை அனைத்து திரையரங்கங்களிலும் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், தெலுங்கில் பெரிய மார்க்கெட் அஜித்துக்கு இல்லாததால், விவேகம் திரைப்படம் மிகவும் குறைவாகத்தான் வசூலித்துள்ளது.
இந்நிலையில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி-2 திரைப்படம் தெலுங்கில் விவேகத்துடன் ரிலிஸ் ஆகி, அதிகம் வசூல் செய்துள்ளதாக டோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஏற்கனவே, விஐபி படத்தின் முதல் பாகம் தெலுங்கில் வெளியாகி மிக பெரிய வெற்றிபெற்றதால், இரண்டாம் பாகத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.
