கடந்த வாரம் தெலுங்கு பட நடிகை ஜான்சி தன்னுடைய காதலன்,  சூர்யா என்பவரால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சம்பவத்தைத் தொடர்ந்து,  தற்போது மேலும் ஒரு நடிகை காதலன் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' படத்தில் துணை நடிகையாக நடித்தவர் யாஷிகா (21 ). மேலும்  பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

திருப்பூரை சேர்ந்த இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், சென்னைக்கு வந்து, ஆரம்பத்தில் ஒரு விடுதியில் தங்கி நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார். தற்போது இவருக்கு திரைப்படங்களிலும், சீரியல்களை நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

மேலும் இவர் மோகன்பாபு என்கிற (22 )  வயது இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு வீட்டில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக,  இருவருக்குள்ளும் ஒரு சில கருத்து வேறுபாடு பிரச்சனைகள் எழுந்துள்ளது.  இதனால் ஒரு கட்டத்தில் மோகன்பாபு,  யாஷிகாவிடம் இருந்து பிரிய வீட்டைவிட்டு வெளியேறினார்.  அவரை பலமுறை யாஷிகா சமாதானம் செய்ய முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது.

இதனால் மனமுடைந்த நடிகை யாஷிகா,  காதலன் ஏமாற்றியது தாங்கமுடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதோடு இறப்பதற்கு முன் தன்னுடைய, அம்மாவின் போனுக்கு வாட்ஸ் ஆப்பிள்,  தன்னுடைய மரணத்திற்கு காரணம் மோகன்பாபு எனவும் அவருக்கு தகுந்த தண்டனை வாங்கித்தர வேண்டும் என ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் போலீசார் தற்போது ஆதாரங்களை திரட்டி நடிகை யாஷிகாவின் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.