Villain Ponnambalam wanted to meet DTV in the BJP ...

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் வில்லன் பொன்னம்பலம் பாஜகவில் இணைந்தார்.

தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் பொன்னம்பலம். சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்த அவர் அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் பேச்சாளராக இருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பிறகு எந்த கட்சியில் சேர்வது என்று இத்தனை மாத யோசனைக்கு பிறாகு முழித்துக் கொண்ட பொன்னம்பலம் நேற்று டிடிவி தினகரனை சந்தித்து பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம்.

பின்னர், என்ன நினைத்தாரோ மனம் மாறி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

கட்சியில் சேர்ந்த உடனேயே பாஜகவால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். வேறு எந்தவொரு கட்சியாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று விசுவாசத்தை காட்டியுள்ளார்.