பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்துள்ள மலையாள நடிகர் ஷான் டான் சாக்கோ, சமீபத்திய பேட்டியில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

சுமார் 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து பின்னணி பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்துள்ள மலையாள நடிகர் ஷான் டான் சாக்கோ, சமீபத்திய பேட்டியில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்னவெனில், பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் சில காட்சிகளில் உருது மொழியில் பேசி நடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

ஏற்கனவே துப்பாக்கி, தலைவா போன்ற படங்களில் இந்தி, தெறி படத்தில் மலையாளம் போன்ற மொழிகளில் பேசி நடித்துள்ள விஜய், உருது மொழி பேசி நடித்துள்ளது இதுவே முதன்முறையாகும்.