நடிகர் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய் சேதுபதி தாதாவாகவும் நடித்து கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா'. இந்த படத்தை புஷ்கர் -காயத்திரி இயக்கி இருந்தனர்.

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படம் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் தெலுங்கின் முன்னணி இரண்டு ஹீரோக்களான என்.டி.ஆர். பாலகிருஷ்ணா மற்றும் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் இந்த செய்தியை 'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ள ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மறுத்துள்ளது. 'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் குறித்த தகவல் தங்கள் மூலம் வந்தால் மட்டுமே அது அதிகாரபூர்வமான செய்தி என்றும், அதுவரை இதுபோன்ற வதந்திகளை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டாம் என்றும்  ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.