விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்..ஒரிஜினலை மிஞ்சியதா? வெளியானது ட்விட்டர் விமர்சனம்..

ஆர் ஆர் ஆர், புஷ்பா போல் இந்த படமும் வசூலில் சாதனை படைக்கும் என கூறி வருகின்றனர். பலரும் மூன்று நான்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram Vedha Hindi Movie Twitter Review

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் விக்ரம் வேதா. அதிரடி திரில்லர் படமாக அமைந்த இந்த படத்தை புஷ்கர்- காயத்ரி எழுதி இயக்கி இருந்தனர். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ஒரு முக்கிய வேடங்களில் தோன்றியிருந்தனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையை மேற்கொண்டிருந்தார். 11 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்த விக்ரம் வேதா 60 கோடி வரை வசூலை குவித்தனர்.

தற்போது இந்த படத்தில் ஹிந்தி ரீமேக் உருவாகியுள்ளது. அசல் பதிப்பின் இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளனர். ஹிருத்திக் ரோஷன் , சைஃப் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கி இந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்தது. ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...பூச்சரத்தை வேட்டியில் கட்டில்...கிழிந்த சட்டையை அவிழ்த்து விட்டு..ரசிகர்களை கதறவிடும் மிருணாள் தாக்கூர்

இதற்கான பிரமோஷன் விழாக்களில் கலந்து கொண்ட நாயகர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. நாளை வெளியாகும் பொன்னியின் செல்வனோடு போட்டியிட களமிறங்கியுள்ளது விக்ரம் வேதா.  விமர்சனங்கள் இன்றிலிருந்தே  வரத்துவங்கி விட்டது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்வீட்டர் ரிவ்யூவில் ரசிகர் ஒருவர் , படம் மிகவும் நன்றாக அமைந்துள்ளதாகவும் வீழ்ந்து கொண்டிருக்கும் பாலிவுட்டை தூக்கி நிறுத்த விக்ரம் வேதா புறப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்றோரு ரிவ்யூவில் ஆர் ஆர் ஆர், புஷ்பா போல் இந்த படமும் வசூலில் சாதனை படைக்கும் என கூறி வருகின்றனர். பலரும் மூன்று நான்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு...அடக்கடவுளே...அவதூறு பரப்ப தனி அலுவலகமா?- புகாரியில் சிக்கிய பிரபல ஹீரோ

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios