vikram vedha 100th day success meet

இயக்குனர் புஷ்கர் காயத்திரி இயக்கத்தில், நடிகர் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கேங் ஸ்டாராகவும் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. கடந்த ஜூலை மாதம் வெளியான இந்தத் திரைப்படம், மாதவனுக்கும், விஜய் சேதுபதிக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்தத் திரைப்படம் இன்றோடு 100 நாளை எட்டியுள்ளதையொட்டி படக்குழுவினர், இன்று மாலை சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் இந்தப் படத்தின் 100 வது நாள் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக, ஷர்தா ஸ்ரீநாத் மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். 'Y NOT Studio' தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாதவன் மற்றும் விஜய் சேதுபதிக்கு மைல் கல்லாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.