vikram the exchange offer for soori
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் ஸ்கெட்ச். இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் விக்ரம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் விஜய் சந்தர், படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், கல்லூரி வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட விக்ரம் பேசும் போது, கமர்சியலான படங்கள் நான் அவ்வளவாக நடித்ததில்லை. எனவே கமர்சியலாக ஒரு படம் பண்ண வேண்டும் என நினைத்து பண்ண படம் ஸ்கெட்ச். இயக்குனர் விஜய் சந்தர் சொன்ன கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. உடனே இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னேன்.இந்த படத்தோட ஃபஸ்ட் ஓபனிங்கே "கனவே கனவே" என்ற பாடல் மூலமா ஆரம்பம்மானது.
முதலில் என் ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். இந்த படத்துக்கு ஃபேன்ஸ் கொடுத்த ஆதரவை என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு ரசிகரும் அவங்க வீட்டில் ஒருவராக என்னை கொண்டாடுவது எனக்கு கிடைத்த பெரிய கிஃப்ட்.

சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு நான்தான் காரணம் . அதுக்காக சூரியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரிடம் இதை பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிராயசித்தமாக இன்னொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்லை என்றால் இரண்டு பேரும் ஹீரோவாக நடிக்க ரெடி என கூறினார் நடிகர் விக்ரம்.
