நடிகர் விக்ரம், நடிப்பிற்காக முழு அர்ப்பணிப்போடு நடிக்கும் நடிகர்களில் ஒருவர் என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார். ஆனால் விக்ரமை முதலில் நம்பி, அவருடைய திரையுலக வாழ்க்கையில் முதல் மாற்றத்தையும், வெற்றியையும் கொடுத்தவர் இயக்குனர் பாலா. 

பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சேது' திரைப்படம் வெற்றி பெற்ற பின்புதான் பல படங்களில் நடிக்க நடிகர் விக்ரமுக்கு வாய்ப்புகள் வந்தது.

தன்னை தூக்கி விட்ட, இயக்குனர் பாலா தான் தன்னுடைய மகன் துருவ் நடிக்கும் முதல் படத்தையும் இயக்க வேண்டும் என, விடாப்பிடியாக இருந்து, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்க செய்தார். 'வர்மா' என்கிற பெயரில் உருவான அந்த திரைப்படம் எதிர்பார்த்தது போல் வரவில்லை என்பதற்காக, மற்றொரு இயக்குனரை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தது இந்த படத்தை தயாரித்து E 4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

இதைத்தொடர்ந்து, துருவ் விக்ரமை வைத்து, இயக்குனர் கிரிசய்யா  'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் மீண்டும் படத்தை இயக்கி முடித்தார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே துருவின் நடிப்பும் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி குறித்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்ரம், ''படத்தின் மூலக்கதையை மாற்றாமல், சரியாக எந்த மொழியில் எடுத்தாலும், படம் வெற்றி பெறும் என கூறினார்'. 

ஏற்கனவே, பாலா இயக்கிய 'வர்மா' படத்தில் அவர் மூல கதையை சரியாக எடுக்கவில்லை என்பதால் தான் அந்த படம், மீண்டும் இயக்கியதாக கூறப்பட்ட நிலையில், விக்ரம் தற்போது சந்தடி சாக்கில் பாலா இயக்கிய படத்தை பற்றி இப்படி பேசி, விக்ரம் போட்டு தாக்கி விட்டார்  என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது பாஸ்.