Asianet News TamilAsianet News Tamil

முதல் படத்திலேயே விக்ரம் மகன் கொடுத்த ஹாட் லிப் லாக்! எத்தனை தெரியுமா?

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.

vikram son lip lock scene in varma movie
Author
Chennai, First Published Sep 23, 2018, 5:20 PM IST

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.

 இந்த படத்தின் மூலமாக முதல் முறையாக,  விக்ரம் மகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதால், ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் இந்த படத்தில், தன்னுடைய மாஸ் நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட, விஜய் தேவகொண்டாவுக்கு இணையாக இவர் நடிப்பாரா என பலர்  தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர். 

vikram son lip lock scene in varma movie

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருவ் நடித்துள்ள 'வர்மா' பட டீசரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்த டீசரில், நடிகர் விஜய் தேவ கொண்டாவுக்கு நிகராக, துருவ நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக, நடிகை மேகா சவுதிரி நடித்துள்ளார். துருவை துரத்தி துரத்தி காதலிக்கும் நடிகையாக பிக்பாஸ் ரைசா நடித்துள்ளார். வேலைக்காரி வேடத்தில் நடிகை ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார் என இந்த டீசரை பார்த்தாலே தெரிகிறது.

vikram son lip lock scene in varma movie

மேலும் இந்த திரைப்படத்தில் பாலாவின் சற்று வித்தியாசமான இயக்கத்தை காண முடியும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் லிப் டூ லிப் காட்சிகளை தன்னுடைய படஙக்ளில் தவிர்த்து விடும் பாலா இந்த படத்தின் கதைக்காக 5 திற்கும் மேற்பட்ட முத்த காட்சிகள் உள்ளதாம். இதனை உருட்டி படுத்தும் விதமாக தற்போது டீசரில் கூட செம ஹாட் கிஸ் சீன் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

vikram son lip lock scene in varma movie

தெலுங்கில் முதல் பாதியில் மட்டும் 10 திற்கும் மேற்பட்ட முத்த காட்சிகள் இருக்கும் நிலையில், இது எதிர்பார்த்ததை விட குறைவு எனலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios