நடிகர் விக்ரமின் மகன் துருவ் 'வர்மா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

மகன் ஹீரோவாக அறிமுகமாகியும், இவருடைய தந்தை இன்னும் கோலிவுட் திரையுலகில் யங் ஹீரோக்களுடன் போட்டி போடும் நடிகர்கள் லிஸ்டில் உள்ளார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் அப்பா விக்ரமின் ரசிகர் அல்ல, விஜயின் ரசிகர் என கூறி விக்ரம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

துருவ் சிறு வயதில் இருந்தே நடிகர் விஜய் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அவரது நடிப்பு, நடனம் எல்லாவற்றையும் ரசித்து பார்ப்பாராம். இதனால் தன்னையும் விஜய் ரசிகர்களில் ஒருவர் என்று பெருமையாக கூறியுள்ளார் துருவ்.