vikram sketch release announced
இயக்குனர் விஜய சந்தர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ஸ்கெட்ச். இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்து வருகிறார். மேலும் ரசிகர்களுக்காக இந்த படதில் 'கனவே கனவே' என்கிற பாடலை விக்ரம் பாடியுள்ளார். மேலும் கலைப் புலி தாணு தயாரிக்கிறார்.

தற்போது ஸ்கெட்ச் படத்தின் பணிகளும் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மிகப் பிரமாண்டமான படைப்பாக உருவாகி வரும் இந்த படம் விக்ரமின் அதிரடி ஆக்சன் படமாக தயராகியுள்ளது.
மேலும் இந்தப் படம் பொங்கல் திரு நாளன்று திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
