vikram sister son turn to acting in tamil movie

விக்ரம்:

நடிகர் விக்ரம் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க பல வருடம் போராடியவர் என்பது அவரைப்பற்றி நன்கு அறிந்த அனைவருக்குமே தெரியும். இவரை ஒரு சிறந்த நடிகராக திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாலா. 

சேது:

இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சேது' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கும் நடிகராக மாறினார் விக்ரம்.

வர்மா:

இயக்குனர் பாலாவை தன்னுடைய குருவாக பார்க்கும் விக்ரம். தன்னுடைய மகனின் முதல் படத்தையும் பாலா தான் இயக்க வேண்டும் என விக்ரம் கேட்டுக்கொண்டதால் தற்போது விக்ரமின் மகன் துருவ் நடித்து வரும் வர்மா படத்தை பாலா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கை மகன் அர்ஜுன்;

இந்நிலையில் நடிகர் விக்ரமின் தங்கை மகன் அர்ஜுனும் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். ஆனால் அவர் எந்த இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. விக்ரமின் தங்கை மகன் அர்ஜுனனின் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.