2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ
2025-ல் பல நடிகைகள் பெரிய திரையில் தோன்றி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் யாருடைய படங்கள் அதிக வசூல் செய்தன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 5 Highest Grossing Actresses of 2025
1. ராஷ்மிகா மந்தனா
2025-ல் பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு இந்தியில் சாவா, சிக்கந்தர், தம்மா ஆகிய படங்களும், தமிழில் குபேராவும், தெலுங்கில் தி கேர்ள் பிரண்ட் என மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் சாவா, சிக்கந்தர், தம்மா, குபேரா ஆகிய நான்கு படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளின. இந்த ஐந்து படங்களின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.1347.71 கோடியாம். இதன் மூலம் அதிக வசூல் அள்ளிய ஹீரோயினாக முதலிடத்தில் உள்ளார் ராஷ்மிகா.
2. ருக்மிணி வசந்த்
ராஷ்மிகாவுக்கு அடுத்தபடியாக அதிக படங்களில் நடித்த ஹீரோயின் என்றால் அது ருக்மிணி வசந்த் தான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு காந்தாரா சாப்டர் 1, ஏஸ் மற்றும் மதராஸி ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. இதில் காந்தாரா மற்றும் மதராஸி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், ஏஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்த ஆண்டு ருக்மிணி நடித்த படங்களின் ஒட்டுமொத்த வசூல் ரூ.962.33 கோடியாகும்.
3. சாரா அர்ஜுன்
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சர்ப்ரைஸான பெயர் என்றால் அது சாரா அர்ஜுன் தான். இவர் வேறு யாருமில்லை, தெய்வத் திருமகள் படத்தில் நடிகர் விக்ரம் மகளாக நடித்தவர். தற்போது இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் துரந்தர் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார் சாரா அர்ஜுன். அறிமுகமான முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இப்படம் 836.75 கோடி வசூலித்துள்ளதால் இந்த பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ளார் சாரா.
4. அனீத் பட்டா
2025-ல் அதிக வசூல் அள்ளிய ஹீரோயின் பட்டியலில் 4-ம் இடத்தில் அனீத் பட்டா உள்ளார். இவர் தான் அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.570.33 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறார். இந்த ஆண்டு இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட சையாரா படத்தில் நாயகியாக நடித்தவர் தான் அனீத் பட்டா.
5. கியாரா அத்வானி
2025-ம் ஆண்டின் அன்லக்கி ஹீரோயின் என்றால் அது கியாரா அத்வானி தான். இந்த ஆண்டு இவர் நடிப்பில் கேம் சேஞ்சர் மற்றும் வார் 2 ஆகிய இரண்டு பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இந்த இரண்டு படங்களின் ஒட்டுமொத்த வசூல் ரூ.550.63 கோடி ஆகும். அதன்மூலம் இந்த பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார் கியாரா அத்வானி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

