தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான 'சாமி 2 ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இந்த படத்தில் அவர் பாடிய 'கந்தசாமி' மற்றும் 'புது மெட்ரோ ரயில்' பாடல்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

இந்த படத்தை தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தாமதம் ஆகிக்கொண்டே செல்கிறது. எனினும் அடுத்தடுத்து தான் நடிக்க உள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம்.

அந்த வகையில் இப்போது விக்ரம் நாயகனாக நடித்து வரும் 'கடாரம் கொண்டான்' படத்தில் ஜிப்ரான் இசையில் விக்ரம் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். 

'கடாரம் கொண்டான்'  படத்திற்காக பாடிய பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறுகியில், விக்ரம் முழு எனர்ஜியுடனும், ஆர்வத்துடனும் இந்த பாடலைப் பாடியுள்ளார். இந்த பாடலை தினமும் நம் நாள் ஆரம்பமாகும் முன் கேட்போம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார்.

'கடாரம் கொண்டான்' படம் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹசன் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.