Vikram is making a film with Ajith Vijay in the legendary production company
பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் அஜித், விஜய், படத்தைத் தொடர்ந்து விக்ரம் படட்தை தயாரிக்க இருக்கிறது. இது விஜயா புரொடக்ஷனின் 102-வது படமாகும்.
பழமை வாய்ந்த பட நிறுவனமான விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் 100-வது படம்தான் அஜீத் நடித்த ‘வீரம்’.
வீரம் படம், தயாரிப்பு நிர்வாகமான விஜயா புரடெக்ஷன்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கொடுக்கவில்லையாம்.
அதனால், அடுத்ததாக விஜய்யை வைத்து ‘பைரவா’ படத்தை தயாரித்தது. அந்தப்படமும் சொல்லும்படியான லாபம் தரலயாம்.
இந்த நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ஒரு படத்தை, விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம்.
தங்களுடைய 100-வது படத்தில் அஜீத்தையும், 101-வது படத்தில் விஜய்யை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் இப்போது தனது 102-வது தயாரிப்பாக விக்ரம் படத்தை உருவாக்கவிருப்பதாக உறுதியாக சொல்கின்றனர்.
இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டிருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.
ஹரி இயக்கத்தில் தொடங்கப்பட உள்ள ‘சாமி 2’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தொடங்கப்பட உள்ளது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
