vikram in two roles with trisha and keerthisuresh

இருமுகன் படத்தை அடுத்து வாலு இயக்குனரின் ஸ்கெட்ச் படத்தில் நடித்து வரும் விக்ரம் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார் இதனையடுத்து ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் விக்ரமே நடிக்கவிருக்கிறார்.

இருமுகன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். சாமி படத்துக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் பாகத்தில் மாமியாக வந்த த்ரிஷாதான் இதிலும் ஹீரோயின். மேலும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இதில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்னொரு விக்ரமுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.