கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையால், நாளுக்கு நாள் சேதங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வெள்ளத்தால் பல வீடுகள் முழுவதுமாக மூழ்கியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் இன்றி, பல பிரபலங்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அதிகாரிகள் அனைவரையும் மீட்டு பத்திரமாக முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். 

மேலும், மண் சரிவு காரணமாகவும் கேரளாவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பலர் வீடு, உடை, உணவு இன்றி தவித்து வருகின்றனர். 

இதனால் முடிந்த உதவிகளை கேரள மக்களுக்கு செய்யுமாறு அம்மாநில முதமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் பணமாகவும், பொருள்களாகவும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். 

ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு நிதி உதவி கொடுத்துள்ளனர். இதுவரை நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாயும், சூர்யா, கார்த்தி ஆகியோர் 25 லட்சம் ரூபாயும், கமல்ஹாசன் 25 லட்சமும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும். நடிகை ரோகினி 2 லட்சமும், நயன்தாரா 10 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளார். 

இவர்களை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விக்ரம் கேரள மக்களுக்காக 35 லட்சம் நிதி கொடுத்துள்ளார். இந்த தொகை நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி கொடுத்துள்ள தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஏற்கனவே ரஜினி கமலை விட குறைவான நிதியை உதவியாக கொடுத்துள்ளார் என சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரஜினி - கமல் இருவரையுமே நெட்டிசன்கள் விக்ரமுடன் ஒப்பிட்டு பேசிவருகின்றனர்.