உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் படத்தின் முதல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல், பிக்பாஸ் என பிசியாக இருந்த நடிகர் கமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் தற்போது மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ளார். கமல் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படபிபிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா என்பவர் ஜோடியாக நடித்துள்ளாதாக கூறப்படுகிறது. அதோடு கமலை இளமையாக காட்ட ரூ.10 கோடி செலவில் ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை திரையிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. படத்தை வெளியிட மாஸ் வேலைகளை மும்மரப்படுத்தி வருகிறது ரெட் ஜெயண்ட். அதன்படி அண்மையில் கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் ரெயில் முழுவதும் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது.
இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி தற்போது முதல் சிங்குளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதோடு பாடல் வரும் மே 11 -ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
