vikram daugther marriage issue

நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் திருமணம் கடந்த மாதம் 30 ஆம் தேதி நடந்தது. அக்ஷிதா தன்னுடைய காதலனும், கருணாநிதியின் பேரனுமான மனு ரஞ்சித்தை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தத் திருமண விழாவில், கருணாநிதியின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் விக்ரமின் மனைவி மற்றும் மகன் ஆகியோரை மட்டும் அந்த நிகழ்ச்சியில் காணவில்லை என்று கூறப்படுகிறது.

விக்ரம் தன்னுடைய ஒரே மகள் அக்ஷிதாவின் ஆசைப்படி திருமணம் செய்து வைத்திருந்தாலும், இந்தத் திருமணத்தில் விக்ரமின் மனைவி மற்றும் மகனுக்கு துளியும் விருப்பம் இல்லாததால்தான் இவர்கள் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள வில்லை என கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் பிரபலங்களில் கூட விஜய் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்ரமின் மனைவி மற்றும் மகன் கலந்து கொள்ளாதது குறித்து தற்போது பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால். விரைவில் இது குறித்து விக்ரமே அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.