நடிகர் விக்ரம் 'கடாரம் கொண்டான்' படத்தை தொடர்ந்து, தன்னுடைய மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமான, 'ஆத்யா வர்மா' படத்தின் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது  நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார்.

விக்ரமின் 58 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை 7 க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

விக்ரமுக்கு ஜோடியாக, கே.ஜி.எப் படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம், மொத்தம் 12 வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானபோது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

 

இதில், மொத்தம் விக்ரம் 7 கெட்டப்பில் இருக்கிறார். இரண்டு கெட்டப்புகளை தவிர, மற்ற 5 கெட்டப்பில் இருப்பது நடிகர் விக்ரம் தானா என அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இந்த போஸ்டரின் தோன்றி மிரட்டி இருக்கிறார் விக்ரம்.

இந்த போஸ்டர் தற்போது வெளியாகி விக்ரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.