“கடராம் கொண்டான்” திரைப்படத்தை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்” படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவுடன் விக்ரம் கரம் கோர்த்துள்ளார். இவர்களது கூட்டணியில் கோப்ரா திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். ஸ்ரீநிதிஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

 

இதையும் படிங்க: முட்டி வரையுள்ள குட்டை உடையில் அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்கள்... கூடும் கிளாமரால் குழப்பத்தில் ரசிகர்கள்!

கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் நடிப்பதை பார்த்து ரசிகர்கள் பிரம்மித்தனர். அதையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான தும்பி துள்ளல் பாடல் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. தற்போது கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வரும்  ஏ.ஆர்.ரகுமானுக்காக படக்குழு அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: விஜே சித்ரா மரண வழக்கில் அதிரடி மாற்றம்... சென்னை கமிஷனர் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் இயக்குநர்  அஜய் ஞான முத்து உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9-ம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுவார் என்ற ஸ்பெஷலான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.இதையடுத்து ட்விட்டரில் #ChiyanVikram #Cobra ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.