Vikram : தனித்துவமான நடிகராக திகழும் விக்ரம் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருபவர் விக்ரம். 1990-ம் ஆண்டே தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான விக்ரமுக்கு, சில ஆண்டுகள் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காமல் இருந்தபோதும், தனது விடாமுயற்சியால் தன்னை படத்துக்கு படம் சிறந்த நடிகராக மெருகேற்றிக்கொண்டு இருந்தார்.
இவரது பொறுமைக்கு கிடைத்த வெற்றி தான் சேது படம். பாலா இயக்கத்தில் வெளியான இப்படம் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து நடிகர் விக்ரமின் கெரியர் உயர்ந்துகொண்டே சென்றது. இதற்கு பின் தில், தூள், சாமி, பிதாமகன், அந்நியன், தெய்வத் திருமகள் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் டாப் நடிகராக உயர்ந்தார்.

தனித்துவமான நடிகராக திகழும் விக்ரம் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதுமட்டுமின்றி நடிகர் விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் துருவ நட்சத்திரம். 2017-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இன்னும் ரிலீசாகாமல் தாமதம் ஆகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக துருவ நட்சத்திரம் பட லுக்கிற்கு மாறி உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ரசிகர்களுடன் கேக் வெட்டியபோது அவர் துருவ நட்சத்திரம் கெட் அப் பில் இருந்ததை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனால் விரைவில் அப்படம் முடிவுக்கு வரும் என்கிற குட் நியூஸை கொடுத்துள்ளார் விக்ரம்.

அதேபோல் மற்றுமொரு முக்கிய அப்டேட் என்னவென்றால், அது அவர் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘கோப்ரா’வில் இடம்பெறும் இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள அதீரா என்கிற பாடல் வருகிற ஏப்ரல் 22-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இந்த டபுள் அப்டேட்டால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... Actor Yash : வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயனுக்கு கே.ஜி.எஃப் நாயகன் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்
