Vikram Box Office : பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்த விக்ரம்
Vikram Box Office : விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருவதோடு பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ந் தேதி வெளியான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யா, காயத்ரி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை, கிரீஷ் கங்காதரனின் பிரம்மிப்பூட்டும் ஒளிப்பதிவு என டெக்னிக்கல் ரீதியாகவும் இப்படம் சிறந்து விளங்கியது.
விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருவதோடு பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை அண்மையில் விக்ரம் படைத்தது. இதன்மூலம் பாகுபலி படத்தின் சாதனையை அப்படம் முறியடித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டி உள்ளது விக்ரம் திரைப்படம். அதன்படி, இங்கிலாந்தில் எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை விக்ரம் படம் படைத்துள்ளது. இப்படம் அங்கு 8 லட்சம் பவுண்டுக்கு மேல் வசூலித்த முதல் தமிழ் படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. இதனை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ராதிகாவ நான் ஏன் அம்மானு கூப்பிடனும்... அவங்க எனக்கு ஆண்ட்டி தான் - ஓப்பனாக சொன்ன நடிகை வரலட்சுமி