சீயான் விக்ரம், நயன்தாரா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கிய 'இருமுகன்' சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்து விக்ரம், ஹரி இயக்கத்தில் 'சாமி 2' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மீண்டும் 'இருமுகன்' படத்தின் வெற்றி கூட்டணியான விக்ரம்-ஆனந்த் சங்கர் மீண்டும் மேலும் ஒரு படத்திற்காக இணையவுள்ளனர்.

 அதிரடி ஆக்சன் படமான உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா அவர்கள் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.