vikram acting actress aishwarya soninlaw

தமிழ் சினிமாவில், 90 களில் கதாநாயகியாக நடித்த பல நடிகைகள் இன்று, அம்மா, அண்ணி, மாமியார் என குணசித்திர வேடத்தில் நடிக்கும் நிலைக்கு வந்து விட்டனர். ஆனால் ஹீரோக்களுக்கு வயதானாலும், தொடர்ந்து இளம் வயது நடிகைகளுக்கு ஜோடியாக நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில், பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா, 90களில் ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். 

அதிலும் இவர் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த 'மீரா' திரைப்படம் காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் எனலாம். அதிலும் இந்த படத்தில் வரும் 'ஓ பட்டர் ஃப்ளே' பாடல் காதலர்களின் விருப்பமான பாடல். இந்த படத்தில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான காதலர்களாக நடித்திருந்தனர். 

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா, விக்ரம் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் 'சாமி2' படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு அம்மாவாக நடிக்கிறாராம். அதாவாது விக்ரமுக்கு மாமியாராக நடிக்க உள்ளாராம். படப்பிடிப்பில் இது குறித்து கேட்டதும் விக்ரம் ஷாக் ஆகி விட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

மேலும் நடிகர்கள் வயதானாலும் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்கள் என்றும், நடிகைகள் அப்படி இல்லை என்றும் ஐஸ்வர்யா சிறு வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.