இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கியதற்கு பின், சூப்பர் ஸ்டார் மருமகன் தனுஷை வைத்து இயக்கிய 'ஜகமே தந்திரம்' படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்த பேச்சு வார்த்தைகள் சென்றுகொண்டிருப்பதாகவும். உறுதியான பின் அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என்கிற தகவல்களும் வந்தன.

'ஜகமே தந்திரம்' படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால், அடுத்த படத்தை தற்போது இயக்க தயாராகி விட்டார் கார்த்தி சுப்புராஜ். நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தை தான் இவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரமின் 60 ஆவது படமாக உருவாகும் இந்த படம் கேங் ஸ்டார் படமாக உருவாக உள்ளது. இதில், விக்ரம் வில்லனாகவும், துருவ் நாயகனாகவும் நடிக்கிறார்களாம். தற்போது மத்திய அரசு, ஷூட்டிங் பணிகள் துவங்க அனுமதி கொடுத்துள்ளதால் விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகளை கார்த்திராஜ் துவங்க முடிவு செய்துள்ளாராம்.

விக்ரம் 60 ஆவது படத்தின் ஷூட்டிங்கிற்காக, கார்த்தி சுப்புராஜ் கொடைக்கானலில் லொகேஷன் பார்த்து முடிவு செய்து விட்டதாகவும் விரைவில் விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினர் கொடைக்கானல் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.